Thipaan / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். பாக்கியநாதன், வடிவேல்-சக்திவேல், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீதேறி போராட்டம் நடாத்திய ஏழு விளக்கமறியல் கைதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் மேற்கொண்ட முயற்சியினால் சில மணித்தியாலங்களில் கைவிடப்பட்டதுடன் கைதிகள் கீழே இறங்கினர்.
கடந்த இரண்டு வருடங்களுக்குமேலாக விளக்கமறியல் கைதிகளாக சிறைச்சாலையிலுள்ள பாரிய குறிறச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகளில் ஏழு பேர் நேற்று (30) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான கட்டிடத்தின் மேல் ஏறி போராட்டத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இவர்கள் அரசியல் கைதிகள் அல்ல இவர்கள் கப்பம் பெற்றமை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது சிறையினுள் கையடக்கத்தொலைபேசி, போதைப் பொருட்கள் என்பன முற்றாக தடை செய்யப்பட்டதன் காரணமாகவே குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025