2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சோளம் செய்கையில் வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடங்களை விட, இந்த வருடத்தில் சோளம் செய்கையில்  வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் இ.கோகுலதாஸன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் கடந்த வருடங்களில் சிறுபோகம் மற்றும் பெரும்போக சோளச் செய்கையின்போது,   4,000 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டது. ஆனால், இந்த வருடம் 3,850 ஏக்கரிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

வாகரை, வாழைச்சேனை, வெல்லாவெளி தியாவெட்டுவான் பழுகாமம், கரடியனாறு தாந்தாமலை போன்ற பிரதேசங்களிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவ்வாறு வளர்ந்துவரும் சோளப் பயிர்களை யானைகள் அழித்து வருவதாகவும் அவர் கூறினார்.  
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X