2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சூழல் மாசடைவதற்கு பிரதான காரணம் பொலித்தின், பிளாஸ்டிக் பாவனை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:24 - 1     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா    

உலகளாவிய ரீதியில் ஆண்டொன்றுக்கு எட்டு மில்லியன்  மெற்றிக்தொன் பொலித்தின்களும் பிளாஸ்டிக் பொருட்களும் சமுத்திரத்தில் சேருகின்றன. இவ்வாறு தொடர்ந்து பொலித்தின்களும் பிளாஸ்டிக் பொருட்களும் சமுத்திரத்தில் சேருமாகவிருந்தால், 2050ஆம் ஆண்டளவில் சமுத்திரத்தில் காணப்படும் மீன்களின் எண்ணிக்கையை விட, பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சூழலியல் ஆய்வாளரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்;ட விரிவுரையாளருமான கலாநிதி ரி.திருச்செல்வம் தெரிவித்தார்.

சூழல் மாசடைவதற்கு பிரதான காரணமாக  பொலித்தின்களும் பிளாஸ்டிக் பொருட்களும்; உள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலித்தின் பாவனையை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம், மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச்சந்தையில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பொலித்தின் பைகளுக்கு மாற்றிடான பை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், பொதுச்சந்தையில் இதற்கான விற்பனை நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 'பொலித்தின்களும்;  பிளாஸ்டிக் பொருட்களும் நிலத்தில் புதைக்கப்படுவதன் காரணமாக அது உக்காத நிலையில் நிலத்தடி நீரில் கலக்கக்கூடிய நிலை ஏற்படும். அது மட்டுமன்றி, இன்று சில பறவைகள், விலங்குகள் பொலித்தினை உட்கொள்ளும் நிலையும் உள்ளது.  மட்டக்களப்பு, கல்லடிப்பகுதியிலுள்ள சில நாய் மற்றும் மாடுகளை ஆய்வு செய்தபோது, அவற்றின்; வயிற்றுப்பகுதிகளில் பொலித்தின்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது' என்றார்.  

'எனது தந்தையின் காலத்தில் ஆறு மற்றும் குளங்களில் நீர் பெறப்பட்டது. எனது காலத்தில் கிணறுகளில் நீர் பெறப்பட்டது.  எனது மகளின் காலத்தில்  குடிநீர் குழாய்களில்; நீர் பெறப்பட்டது. எனது பேரப்பிள்ளையின் இன்றைய காலத்தில் போத்தல்களில் குடிநீர் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபை மட்டுமன்றி, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' எனவும் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 1

  • வர்ஷா Saturday, 07 March 2020 12:35 PM

    சஜித்தே இதற்கு பொருத்தமானவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X