Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனப்பிரச்சினைக்குத் தீர்க்கமானதொரு கொள்கையை, தமிழ் மக்களிடத்தில் மாத்திரமின்றி, சிங்கள மக்களிடத்திலும் கொண்டு செல்லும் ஒரு தலைவராக சஜித் பிரேமதாஸ இருந்தால், அவர் குறித்துப் பற்றிப் பரிசீலிப்பதற்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்களென, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி பிள்ளையார் வீதித் திறப்பு விழா, இன்று (03) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜயாக்கப்படாமால், ஏனைய மக்களுகளைப் போன்று சம உரிமையுடனும் சம அந்தஸ்த்துடனும், வாழ்வதற்குரிய வழிவகையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டுமென்றார்.
சஜித் பிரேமதாஸவைப் பற்றி மக்கள் அனைவரும் அனேகமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கூறிய அவர், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவேன் என சஜித் பிரேமதாஸ சொல்லியிருக்கின்றார் எனவும் 13ஆவது திருத்தம்கூட ஒரு முழுமையான திருத்தமாக அமையவில்லை எனவும் தெரிவித்தார்.
காணி, பொலிஸ், நிதி போன்ற விடையங்கள் போன்றவற்றில், சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் காணி, பொலிஸ், வெளிநாட்டு நிதிகளைக் கையாளக்கூடிய வித்தில் எமக்குத் தீர்வுகளும் அதிகாரப்பகர்வும் கிடைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவிதத் தீர்க்கமான முடிவுகளையும் இதுவரை எடுக்கப்படவில்லையெனவும் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பாத்துவிட்டுத்தான் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் எனவும் அதற்குரிய வழிகாட்டுதல்களைக் கூட்டமைப்புச் செய்யுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago