2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -வடிவேல் சக்திவேல் 

சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்கள் நேற்று வியாழக்கிழமை (08) மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடியிலிருந்து கல்முனைக்கு கார் ஒன்றில் சட்ட விரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட காற்போத்தல், அரைப்போத்தல், முழுப்போத்தல் உள்ளடங்களாக 258 மதுபானப் போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இந்த மதுபானப்போத்தலும் அவற்றைக் கொண்டுசென்ற காரும் கைப்பற்றப் பட்டுள்ளதோடு இவற்றைக்கொண்டு சென்ற சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிரபெத்ததந்திரி ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானங்களை திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X