Suganthini Ratnam / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, சொறுவாமுனை வாவியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 03 மீனவர்களை கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து சுமார் 03 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகளையும் கைப்பற்றியதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் றுக்ஷான் குரூஸ் தெரிவித்தார்.
இழுவை வலை மற்றும் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி வாவி மீன்பிடியில் ஈடுபடுவதினால், வாவியிலுள்ள சிறிய மீனினங்கள் அழிவடையும் நிலையுள்ளது. இதனாலேயே, மேற்படி வலைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
தம்பானம்வெளி, பங்குடாவெளி, விளாவெட்டுவான் உள்ளிட்ட வாவிகளில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த சில தினங்களாக ஏறாவூர்ப் பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025