2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

மட்டக்களப்பு, கொம்மாதுறைக் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் 31 வயதுடைய ஒருவரை திங்கட்கிழமை (08) கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, குறித்த இடத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம்; இயங்கிவந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், அந்நிலையத்திலிருந்து 25 கடவுச்சீட்டுகள், வெளிநாட்டுக் காப்புறுதிப்பத்திரங்கள், விமானப் பற்றுசீட்டுகள்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும்; அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X