Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வெள்ளாவெளி பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக 17 பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளை கல்முனை பிரதேசத்துக்கு கால்நடையாக எடுத்துச் சென்ற இருவரை இன்று செவ்வாய்க்கிழமை காலை சவளக்கடை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்துக்கு சவளக்கடை பகுதியூடாக சட்டவிரோதமாக 11 பசுமாடுகள் மற்றும் 6 எருமை மாடுகளை கால்நடையாக கொண்டு சென்ற குறித்த இருவரையும் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago