Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பு மாநகரில் சடலங்களை எரிப்பதற்கு உரிய இடம் ஒதுக்கப்படாமையால், இந்துக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (28) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'மட்டக்களப்பில் தற்போது திறந்த வெளியிலேயே சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கருத்தில் கொண்டு, கடந்த 2014ஆம் ஆண்டு கல்லடி இந்து மயானத்துக்காக 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் சில குழுவினரின் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக, இந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது' என்று அவர் கூறினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல தனியார் வைத்தியசாலைகளில், நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையின் போது அகற்றப்படும் மனித அவயங்கள், கழிவுகள் போன்றவற்றை முறைப்படி அப்புறப்படுத்துவதற்காக, நீற்றுலை (ஐnஉiநெசயவழச) ஒன்றை கல்லடியில் பொருத்துவதற்கு திட்டமிட்ட போதும், அதுவும் தோல்வியில் முடிவடைந்தது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நீற்றுலையை, மட்டக்களப்பு நாவலடி மற்றும் ஊறணிப் பிரதேசங்களில் பொருத்துவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சடலங்கள் திறந்த வெளியில் எரிக்கப்படுகின்றமையினால், தொற்று நோய் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, பாதுகாப்பான முறையில் சடலங்களை எரிப்பதற்காக எம்மால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரம் தொடர்பில் மக்கள் சற்று உணரவேண்டும் என்றும் அவர் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025