வா.கிருஸ்ணா / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், மாநகரசபையின் அனுமதியின்றி ஒட்டப்படும் கட்டப்படும் சுவரொட்டிகளும் பதாகைகளும் அகற்றப்படுவதுடன், அதனை ஒட்டும் கட்டும் அமைப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென, மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து அவர் கருத்துரைக்கையில், மட்டக்களப்பு நகரத்தின் அழகுபடுத்தல் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல அமைப்புகளால் குறிப்பாக தனியார் நிறுவனங்கள், தனியார் வகுப்புகள், திரையரங்குகள், மதப்பிரசார குழுக்கள் போன்றவர்களால் விநியோகிக்கப்படுகின்ற சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
எனவே, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற தற்போதைய சூழலில், குறிப்பிட்ட கட்சிகள், மாநகரசபையின் அனுமதியைப் பெற்று தங்களுடைய சுவரொட்டிகளையும் பதாதைகளையும் உரிய இடங்களில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் அல்லாதுவிட்டால் மாநகரசபையின் நியதிச் சட்டத்தின் கீழ் அந்தந்த கட்சிகளுக்கு, அமைப்புகளுக்கு, நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .