Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலை அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக் குற்றிகளை இன்று (12) கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
13 தேக்கு மரக் குற்றிகளையும் டிப்பர் ரக வாகனத்தையும் கைப்பற்றியதுடன், சாரதியை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாக கரயடினாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார்.
பெரிய புல்லுமலை அரச வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டபட்ட தேக்கு மரக்குற்றிகள் ஏறாவூரிலுள்ள மர ஆலைக்கு கொண்டு செல்லும் வழியில் கரடியனாறு பொலிஸ் சாவடியில் சோதனையிட்ட போதே, குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பில், கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .