Freelancer / 2021 ஜூன் 12 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
கசிப்பு காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட நிலையில் இன்று (12) மாலை வாகனேரி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசிஆலை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர்களுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தட்டாவெளி அக்கரானை பகுதியில் நடாத்திய சோதனையின் போதே இந்த இரண்டு சந்தேக நபர்களும், அவர்களிடம் இருந்து கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தக்கூடிய கோடா 420 லீற்றரும் ஸ்பிரிட் 20 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 26 மற்றும் 20 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
M
52 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago