2025 மே 09, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத நடவடிக்கைகள்; பெண்கள் உட்பட நால்வர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், கனகராசா சரவணன்

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கேரளா கஞ்சா வைத்திருந்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுப் பகுதியில், கேரளா கஞ்சா, கசிப்பு வைத்திருந்த  இரு பெண்கள், இன்று (29)  பிற்பகல் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கும்புறுப்பிட்டி, கிழக்கு சலப்பையாறு பகுதியில், 720 மில்லிக் கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த 49 வயதுப் பெண்ணும்  குச்சவெளி, வீரன் சோலை 3,500 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த  63 வயதுப் பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 25, 26 வயதுடைய இருவரை, நேற்று (28) இரவு கைதுசெய்ததுடன் 1,500 லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளதாக, மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X