2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோத முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Editorial   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், பேரின்பராஜா சபேஷ்

வாகரை, வெருகல், திக்கண காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரக்குற்றிகள், இன்று (06) அதிகாலை, கைப்பற்றப்பட்டனவென, வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.திஸாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சட்டவிரோத மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக, வாகரை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

திக்கண காட்டுப் பகுதியில் இருந்து ஓட்டமாவடிக்கு கழிவுக் கடதாசி அட்டைகள் கொண்டு வருவது போல், கழிவுக் கடதாசி அட்டைகளால் மறைத்துக் கொண்டுவரப்பட்ட நிலையில், 7 அடி மதிக்கத்தக்க 11 முதிரை மரக்குற்றிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

மரக்குற்றிகளை ஏற்றி வந்த எல்ப் ரக படி வாகனமும், வாகரைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதென, வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X