Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தை நக்கி சுத்தப்படுத்தவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா? என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், லொஹான் ரத்வத்தை ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிசறை அரசியல்வாதி என்றார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். காணமல்போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் அவரது மகன் ஆகியோர் எங்கே எனவும் கேள்வியெழுப்பிய அவர் அவ்வாறானால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்களா எனவும் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் கொலைக்குற்றவாளியென்பதை ஏற்றுக்கொள்கின்றது என்பதே அதன் அர்த்தம் என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாது எனவும் அவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் கற்கவேண்டும் எனவும் கற்றுக்குட்டி அரசியல் செய்யவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு ஒரு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது.இலங்கையின் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கடந்த சில நாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் தூற்றப்பட்டவர். அவர் நேற்றையதினம் (25) மட்டக்களப்புக்கு வந்து கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுச்சென்றுள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் மதபோதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாளிடவைத்து துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,அதற்கும் மேலாக தமிழ் அரசியல்கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியிருந்தார். அவ்வாறான ஒருவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago