Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பாக்கியநாதன்
அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுக்கும் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான, மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார, கல்வி, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட சமூக நலன்சார் துறைகள் பற்றிய மீளாய்வுக் கூட்டம், மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில், இன்று (07) நடைபெற்றது.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னேற்றங்கள் மற்றும் தேவைகள், மாவட்ட எல்லைக் கிராமங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பத்தின் தலைமைதாங்கும் பெண்கள் முகங்கொடுக்கும் சவால்கள், கலாசரச் சீரழிவுக்கு காரணமான விடயங்கள், பாடசாலை இடைவிலகல் மாணவர்களின் எதிர் காலம் ,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கம், மாவட்டத்தில் மக்கள் முகங்கொடுக்கும் காணிப்பிரச்சினைகள், மட்டக்களப்பின் பாரம்பரிய இடங்கள் பற்றிய மீளாய்வு மற்றும் யுத்தத்தின் பின்பு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனநிiயில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் சிந்தனைகளும் பற்றிய மீளாய்வு இடம்பெற்றன.
அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளாக ஜென்னா லன்ஷா, றோபட் ஹோப்ஸ்ரர், ஜூலி றோவெல், கிறிஸ்டோபர் அன்டர்சன் ஆகியோரும் மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ். மாமாங்கராஜா, மேலதிகச் செயலாளர் பொறியியலாளர் ரி. அன்ரன், ஆலோசகர் பேராசிரியர் அருட்தந்தை ராஜேந்திரா, கலாநிதி என். பிரேம்குமார் உள்ளிட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
48 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
4 hours ago