2025 மே 12, திங்கட்கிழமை

சமூர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்

Niroshini   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தரை  மூவர் இணைந்து தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தடன் தொடர்படைய  மூவரையும் கைதுசெய்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்

துறைநீலாவணை தெற்கில் சமுர்த்தி உத்தியோத்தராக கடமையாற்றும் த.வினாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தனது கடமைப் பிரிவில் வாழும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பான தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பி.ப 3.00 மணியளவில் அம் மூவரும் தங்களுக்கான சமூர்த்திக் கொடுப்பனவை வழங்குமாறு கேட்போது, அவர்களுக்கான கொடுப்பனவு சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்டு இருப்பதாகவும் அதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் சமுர்த்தி உத்தியோகத்தர் கூறியபோதும் அதனையும் பொருட்படுத்தாது அவரை தாக்கி விட்டும்  தப்பிச்சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X