2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சர்வதேச சிக்கன தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
 
சர்வதேச சிக்கன தினத்தையொட்டி, மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய சேமிப்பு வங்கியின் செங்கலடி கிளையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி இன்று(31) காலை நடைபெற்றது.
 
செங்கலடி கிளை முகாமையாளர் பேரின்பராஜா நிஷாணி தலைமையில் மதுபானம் மற்றும் புகைத்தல் அற்ற சேமிப்பொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம், மதுபோதையற்ற இல்லத்தில் சந்தோசம் பொங்கிடும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆரம்பமான பேரணி ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்று மீண்டும் வங்கியை வந்தடைந்தது.
 
மதுபாவனை மற்றும் புகைப்பிடித்தலுக்கு செலவிடும் பணத்தை எவ்வாறு சேமிக்கலாம் என விழிப்பூட்டும் துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

 


  Comments - 0

  • Nisha Sunday, 01 November 2015 09:57 AM

    Thanks for your valuable helps Mr. Sabesan

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X