2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வும்

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு, வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்காவில், கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வும், நாளை (10) நாளை மறுநாள் (11) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு உளநல நிலையமும் வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்காவும் இணைந்து, இந்த மாபெரும் கண்காட்சியையும் உளநல விழிப்பூட்டல் நிகழ்வையும் நடத்தவுள்ளன.

“மாறுகின்ற உலகில் இளம்பராயமும் அதன் ஆரோக்கியமும்” என்னும் தலைப்பில், இம்முறை இந்த சர்வதேச உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இக்கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வும் தொடர்பில், ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு உளநல நிலையத்தில் இன்று (09) காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு உளநல நிலையம், வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்கா ஆகியவற்றின், பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம், உளநல நிலையத்தின் இணைப்பாளர் இ.ஜு.சில்வஸ்டர் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் உளவியல் தாக்கம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், இளம்பராயத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .