Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, புதூர் பகுதியிலுள்ள சலூன் ஒன்றிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் அச்சலூன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சலூன் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இங்கிருந்து 14,500 ரூபாய் பணத்துடன், முடிவு திருத்துவதற்கான உபகரணங்களும் திருட்டுப் போயுள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .