ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

“சவால்களுக்குள் வாழ கற்றுக் கொள்ளுதல்” எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல், யோகா மன ஒருநிலைப்படுத்தல் பயிற்சியுடன், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (19) மாலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு உளவளத்துணை ஒன்றியத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன், மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், உளநல பயிற்சி ஆலோசகர் எப். பெலீஸியன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் உட்பட இன்னும் பல கல்வித்துறை சார்ந்தோரும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர் சிறுவர் அபிவிருத்தி உட்பட துறைசார்ந்த அதிகாரிகளும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சமகால தொழிநுட்ப இயந்திர வாழ்க்கை முறையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் இவற்றுக்கு ஈடுகொடுத்து இளையோரை ஆக்கபூர்வமாக வழிநடாத்துதல் பற்றிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago