Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு, கல்முனை நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில், கல்முனை நீதிமன்ற பிரதேசத்துக்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் பொலிஸாரால் நேற்று (16) கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி, “கல்முனை நீதிமன்றத்தால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவை மீறியதாக தெரிவித்தே, இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே நான் எவ்வாறு நீதிமன்றத் தடை உத்தரவை மீறினேன் என எனக்கும் தெரியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago