Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
“அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம், இன்றைய சூழ்நிலையில் ஒரு சாத்தியமற்றதாக மாற்றப்படலாம்” என, மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு நேற்றிரவு (16) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் இன்றைய சூழ்நிலையில் ஒரு சாத்தியமற்றதாக மாற்றப்படலாம். ஏனென்றால், உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டத்தின் படி உயர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட முடியாது. அந்த தீர்ப்பை ஜனாதிபதிக்கும் சபாயநாயகருக்கும் அனுப்பி வைப்பார்கள். சபாயநாயகர்தான் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பார்.
அவருக்கு அது கிடைக்கப்பெற்று நாடாளுமன்ற அமர்வு எப்போது முதலாவதாக இடம்பெறுகின்றதோ, அன்று முதல் வேலையாக இதனை அவர் அறிவிப்பார். இது சட்டமாகும்
அந்த அடிப்படையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நாடாளுமன்றம் கூடவுள்ளது. அன்று அதனை சபாநாயகர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வாசிப்பார். அதன் பின்னர் இதனை வைத்து ஒரு தீர்மானத்துக்கு நாடாளுமன்றம் வரும்.
சில வேளைகளில், தானாக கிழக்கு மாகாண சபை கலையப்படலாம். அவ்வாறு கலையப்படும் போது, தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், வட்டார முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் வட்டார முறையிலேயே நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முறையையும் மீண்டும் பழைய தொகுதி முறையிலேயே நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதற்கு பெரும்பான்மை கட்சிகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. ஆகவே, இடையிலுள்ள மாகாண சபை விகிதாரசாரத்தில் இருப்பது நாட்டுக்கு பொறுத்தமற்றது. என்ற வகையில், மாகாண சபை தேர்தலிலும் அதற்கென்ற தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு, அதன் மூலம் நடாத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் ஒரு பிரதேச செயலகத்துக்கு ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற யோசனையை நான் முன் வைத்துள்ளேன். அதனை எமது கட்சியைச் சேர்ந்த சிலர் ஏற்றுக் கொண்டனர்.
மாகாண சபை தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையில் நடாத்துவதில் யாருக்கும் எந்த முறன்பாடும் கிடையாது. மாகாண சபைகள் கலைக்கப்பட்டவுடன், மாகாண சபை தேர்தல் முறையில் சில திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் சில வேளைகளில் முயற்சிகளை எடுக்கலாம்.
அவ்வாறு முயற்சி எடுத்தால் மீண்டும் தேர்தல் முறையில் மாற்றம் வரும் வரை, மாகாண சபை தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
அரசமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் சிலவற்றை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. மாகாண சபைகளை கலைக்கின்ற மாகாணத்துக்கான தேர்தலை தீர்மானிக்கின்ற பல அம்சங்களை மத்திய அரசாங்கத்துக்கு எடுக்கின்ற அம்சமும் இந்த 20ஆவது திருத்தத்தில் இருக்கின்றது.
ஆகவேதான், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இது தொடர்பில் பல ஆய்வுகளை செய்து அதனை முழுமையாக எதிர்ப்பதோடு வட மாகாண சபை முழுமையாக அதை எதிர்த்தது.
மாகாண சபைகள் அதிகாரமுள்ள சபைகளாக இருக்க வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதிலே நாம் மிக தெளிவாக இருக்கின்றோம்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு காரணங்களுக்காக அதை நான் முழுமையாக எதிர்த்தேன். பொதுஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற குழு கூட்டத்திலே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்திலே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான கூடடத்திலே நானும் எனது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தேன். திருத்தத்தை வைத்தே ஆதரித்ததாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார்.
அவ்வாறான ஒரு திருத்தம் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வரமுடியாது. அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஒரு திருத்தம் வரவேண்டுமாக இருந்தால், அது முதலில் அமைச்சரவைக்கு போக வேண்டும். அமைச்சரவை அதனை அங்கிகரிக்க வேண்டும். பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர்தான், அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தின் திருத்தம் சபாயநாயகரால் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளில் ஒரு மாகாண சபைக்கேனும் அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல திருத்தம் அனுப்பி வைக்கவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர், தனக்கு ஒரு திருத்தம் வந்தது என்று சொன்னது, என்னுடைய பார்வையில் அது உண்மைக்க புறம்பான ஒரு செயலாகும். அவ்வாறான ஒரு திருத்தத்தை நானும் இதுவரை காணவில்லை. வேறு எந்தவொரு முதலமைச்சரும் காணவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .