2025 மே 12, திங்கட்கிழமை

சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படுவன் நான் அல்ல.

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

உங்கள் வியர்வையின்  உழைப்பை உணர்ந்தவன் நான். சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படுவன் நான் அல்ல. உங்களோடு இருந்து கொண்டு உங்களுக்காக சேவை செய்வதற்கு எப்போதும் உள்ளேன்எனத் தெரிவித்த அமைச்சர் சஜீத் பிரேமதாச,மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயாராகி விட்டதாகவும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்தார்.

இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராமத்தில்' காந்தி மாதிரிக் கிராமம்' மற்றும்   அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட 'முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம்' என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டன.

கல்குடா பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டு திட்டத்திற்கான பிரதான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர்.மா.உதயகுமார் தலைமையில் சனிக்கிழமையன்று ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுபோது தெரிவிக்கையில்:  நாட்டு மக்களின் தேவைக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம்.உங்களால் வெற்றி பெறமுடியுமா? வெற்றி பெறுவீர்களா? என்று கேட்கின்றனர். பிரேமதாச தேர்தலில் தோற்றதில்லை. அதேபோன்று இந்தப் பிரேமதாசவும் தோல்வியுறப் போவதில்லை.இம்முறை வெல்லப் போவது பிரேமதாச மாத்திரமல்ல, மக்கள் தான் .தொழில் முயற்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் தான் ஒரு நாடு அபிவிருத்தியின் பால் ஈர்க்கப்படும்.எனவே,தொழில் முயற்சியின் மூலம் இலங்கை அபிவிருத்தி அடைந்துள்ளது என்று கேட்டால் பொய்யென்றே கூற வேண்டும்.கணிசமான அளவிற்கு இலங்கையில் தொழில் முயற்சியை பயன்படுத்தவில்லை. அரசியல் வாதிகள் பேசும் பேச்சளவிற்கு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி காணவில்லை என்றே கூறவேண்டும்.நான் உங்கள் மத்தியில் வீணான பேச்சுக்களை பேச வரவில்லை.வெறும் பேச்சில் மாத்திரம் தங்கியிருப்பவன் நான் அல்ல. நவம்பர் மாதத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருந்தால் அந்த முடிவின் பால் செயல்பட தயாராகவுள்ளேன்என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X