Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மே 31 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
மட்டக்களப்பில் வைத்து 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 15 ஆவது நினைவு தின நிகழ்வு, காந்தி பூங்கா முன்பாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுவரும் நினைவுத் தூபியில் இன்று (300 நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்க மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீபச் சுடர் ஏற்றப்பட்டு மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்,அரசியல் தலைமைகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago