Princiya Dixci / 2021 ஜனவரி 11 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு, 2ஆம் குறிச்சி, நாவலர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமி, நேற்று (10) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரியும் நிலையில், சிறுமி தமது சிறிய தாயின் வீட்டிலேயே வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அம்மம்மாவின் வீட்டில் இருந்தபோது குறித்த சிறுமி தாக்கப்பட்டதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், அப்பகுதிக்கான கிராம சேவகரால் சிறுமி மீட்கப்பட்டு, பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வைத்தியசாலையில் இருந்த சிறுமியை, சிறுமியின் சிறிய தாயார், நேற்று முன்தினம் சனிக்கிழமை (09) தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற நிலையில், நேற்று சிறுமி, குறித்த சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago