Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மை மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்கள் என்றும் அவர்கள் எப்போதும் சரியான முடிவை எடுப்பவர்கள் என்றும் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன், “இந்தத் தேர்தலிலும் சிறுபான்மை மக்கள் சரியான முடிவையே எடுப்பார்கள்” என்றார்.
அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரவித்த அவர்,
“பிரதம ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர், அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அண்மையில் சந்தித்துதோம். இதன்போது,கிழக்கு மாகாணத்தில் காணக்கூடிய பிரச்சினைகள், மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் பல சொல்லப்பட்டன.
“முக்கியமாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம். அதேபோன்று, காணாமலாககப்பட்டவர்களது விடயங்கள் முறையாக அணுகப்பட வேண்டு என்ற விடயங்கள். அத்துடன், சமத்துவம், சமநீதி, இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். பாரபட்சம் பக்கச்சார்பு இருக்கக் கூடாது இனத்தின், மதத்தின் காரணமாக புறக்கணிப்பு, ஒதுக்குதல் இருக்கக்கூடாது.
“எங்களது பிரதேசத்தில் காணப்படுகின்ற பல தொழில்சாலைகள் மூடப்பட்டுக்கிடந்தன. அந்தத் தொழில்சாலைகளைத் திறந்து, இளைஞர், யுவதிகளான பட்டதாரிகளிலிருந்து சாதாரண தரம் சித்தியடைந்தவர்கள், சித்தியடையாதவர்கள் வரை தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனும் விடயம்.
“அதிகாரப்பகர்வுமூலம் பிரிக்கப்படாத நாட்டுக்குள் இந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்கிற விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
“மேய்ச்சல்தரை தொடர்பான விடயங்கள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
“எனவே, இந்த விடயங்கள் தேர்தலின் பின்பு கவனம் எடுத்துச் செயற்படுவதாகச் சொன்னார்கள். பொறுப்புகளை நாங்களும் எடுத்துச் செயற்பட வேண்டும் என்று சஜித் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் எடுத்த முடிவு காலம் தாழ்த்தி எடுக்கப்பட்டதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளது முடிவுகளின் பின்னர்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
“எங்கள் மக்களைப் பொறுத்தவரையில் சரியானவற்றை சரியான முறையில் முடிவெடுப்பவர்கள். எனவே, சிறுபான்மை மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago