2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை உறவுக்கு அழைத்த சிறுவர்கள் கைது

Freelancer   / 2022 டிசெம்பர் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதை வீடியோ பதிவு செய்து, அதைக் காட்டி சிறுமியை பாலியல் செயற்பாட்டுக்காக படுக்கைக்கு அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை 2 மாதங்களுக்கு முன்னர் அதே வயதுடைய அவரது காதலன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்தபோது, நண்பர்கள் மூவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், குறித்த சிறுமியை தொடர்பு கொண்ட காதலனின் நண்பர்கள், குறித்த உடலுறவு வீடியோ சீடி வடிவில் தம்மிடம் உள்ளதாகவும் தங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.  

இது தொடர்பாக சிறுமி, பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து  பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேரை கைது செய்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கனகராசா சரவணன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X