Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாநகர மேயரின் வழிகாட்டலின் கீழ், அவருடைய ஆலோசனையுடன் யூனிசெப், சீரி நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன், மட்டக்களப்பு மாநகரத்தை, சிறுவர் சினேக மாநகரமாக மாற்றுகின்ற நடவடிக்கைகள், இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு மாநகரத்தை முற்று முழுதாக சிறுவர்களுக்கு சினேகமான மாநகரமாக மாற்றி, சிறுவர்கள் பாதுகாப்பாகவும் மன மகிழ்ச்சியோடும் வாழகூடிய ஒரு மாநகரமாக மாற்றுவதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாநகரம் அழகுபடுத்தப்படுகின்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், வீதி அபிவிருத்த அதிகார சபையின் மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.சசினந்தன், சீரி நிறுவனத்தின் இலங்கை நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் வி.இ..தர்ஷன், சீரி நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் செல்வி பவினா மோகன்ராஜ், யூனிசெப் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி எஸ்.சர்மிளா, மாநகர சபை உறுப்பினர் அய்யாதுரை ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026