2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறுவர்கள் இருவரை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தைக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, மாவடிச்சேனை பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்த நபரை, பதினான்கு நாள்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.மொஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

மொஹமட் லெப்பை சுலைமா லெப்பை (வயது 46)  என்பவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) என்ற தனது இரண்டு மகன்களையும், செவ்வாய்க்கிழமை (14) இரவு, தனது வீட்டு வளாகத்திலுள்ள கிணற்றில் தூக்கி எறிந்ததில், அவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவி, ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார் என்றும் சிறுவர்கள் இருவரும், கொழும்பிலுள்ள சிறுவர் இல்லமொன்றிலேயே வளர்ந்து வந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லத்தில், சிறுவர்களை சேர்த்துவிடுவதாகக் கூறி, குறித்த நபர், அவ்விருவரையும் கொழும்பிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து, இரண்டு மாதங்களுக்கு முன்னர்  அழைத்து வந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக, சிறுவர்களை சிறுவர் இல்லத்தில் சேர்த்துவிட முடியததால் சிறுவர்கள், குறித்த நபரின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையிலேயே மேற்படி நபர், செவ்வாய்க்கிழமை(14) இரவு, சிறுவர்களை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக, சடலங்கள் இரண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி விடுமுறையில் உள்ளதால், 18ஆம் திகதி  சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X