2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிற்றுண்டிச்சாலைகளை தரப்படுத்தும் செயற்றிட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகளை தரப்படுத்தும் செயற்றிட்டம், காத்தான்குடி நகர சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள் என்பவற்றின் உரிமையாளர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு சுகாதார ரீதியாக விழிப்பூட்டல், அறிவூட்டல்களை வழங்கும் நடவடிக்கை, இன்று (12) மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான செயலமர்வொன்று, காத்தான்குடி நகர சபையால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்பூட்டல் செயலமர்வில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன், நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

உணவுத் தயாரித்தலிலுள்ள சுகாதார நடவடிக்கைகள் அது தொடர்பான தரப்படுத்தல்கள், தொற்றா நோய் தொடர்பான விடயங்கள் என்பவைகள் தொடர்பாக, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் இதன்போது விளக்கிக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X