Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், இம்முறை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடிவேம்புக் கிராமத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென, இராஜாங்க அமைச்சரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
எதிர்வரும் 7ஆம் திகதி, சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள இக்கூட்டத்துக்கான, சகல ஏற்பாடுகளுக்கும் பொறுப்பான ஏற்பாட்டுக்குழுவின் தலைவராக, ஜனாதிபதியால், தான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
“நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் கூட்டத்தில் பங்குபற்ற வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து வருவதற்காக, சுமார் 1,500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
"வெளியூர்களிலிருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட மக்களும், இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின், தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் பெருந்தேசிய பூர்வீகக் கட்சியொன்று, அதனது மேதினக் கூட்டத்தை ஜனாதிபதி தலைமையில் நடத்துவது, இதுவே முதற்தடவையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
17 May 2025