Princiya Dixci / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி சுகாதார அதிகாரிகளை பேஸ்புக்கில் விமர்சித்த அரச அதிகாரியொருவருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில், நபரொருவர் வெளியிட்ட செய்திக்கு, சுகாதார அதிகாரிகளை நாகரீகமற்ற முறையில் விமர்சித்து, மேற்படி அரச அதிகாரி பேஸ்புக்கில் பின்னூட்டல் செய்துள்ளார் என பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி அரச அதிகாரி கடமையாற்றும் அரச நிறுவனத்தின் தலைவருக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேற்படி அரச அதிகாரி சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தேவையேற்படின் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் செல்ல வேண்டி ஏற்படுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கும் போது, பொதுமக்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். எனினும், தேவையற்ற விமர்சனங்கள் சுகாதார அதிகாரிகளின் உள்ளங்களை பாதிக்கச் செய்வதுடன், அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதாக அமையும். இது விடயத்தில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago