2025 மே 09, வெள்ளிக்கிழமை

சுகாதாரத் தொழிலாளி உண்ணாவிரதம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் தொழிலாளியான தாஸ் என்பவர், 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தை, இன்று (10) ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிட வருபவர்களுக்கான தங்குமிடமொன்றை அமைத்தல், தள்ளுவண்டிகளை மேலதிகமாக வழங்குதல், வைத்தியர்கள், சுகாதார உதவியாளர்களுக்கான  ஓய்வறைகளை வழங்குதல் போன்ற நோயாளிகள் சார்ந்தும் அவரது தொழில் சார்ந்தும் 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

பதுளையைச் சேர்ந்த இவர், தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X