2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கு அனுமதி

Janu   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்ட நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ  மட்டக்களப்பு மாவட்டத்தின் நீதித்துறை சார்ந்த பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக கள விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் யுத்த காலத்திற்கு முன்னர் கொக்கட்டிச்சோலை "கிராமக்கோடு" இயங்கி வந்த இடத்தில் புதிய சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதோடு அவற்றிற்கு முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த கள விஜயத்தின் போது  கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 வ.சக்தி 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X