2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘சுற்றுலாத்துறை தொழில்வாய்ப்பை பெண்கள் பயன்படுத்த வேண்டும்’

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,  பேரின்பராஜா சபேஷ்

“கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பெண்களுக்கான அதிகளவு தொழில் வாய்ப்புகள் உள்ளன. இவற்றைப் பெண்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டம், மட்டக்களப்பில் நேற்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்ட போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு ஈஸ்ட லகூன்ஹோட்டலில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், “சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டமும் கிழக்கு மாகாணமும் முன்னேற்ற மடையும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

“கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெண்களுக்கு சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

“இதற்காக திறன் விருத்தி பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், சுய தொழில் பயிற்சிகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

“இந்த மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அவுஸ்த்ரேலியா நிதியுதவியளிக்க முன் வந்துள்ளது.

“இதனால் பல இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.

“மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு உகந்த மாவட்டமாகும். வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

“இந்த மாவட்டத்தில் அழகான குளங்கள் வாவிகள், இயற்கையான பசுமை நிறைந்த இடங்கள் காணப்படுகின்றன.

“இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கமான சூழ்நிலையில் சுற்றலாத்துறையை வளர்ச்சி  கண்டு வருகின்றது. அதற்கு இந்த சுற்றுலாத்துறை மேம்படுத்துவது தொடர்பான தொழில் பயிற்சிகள் அதனோடு தொடர்புடையதான வேலைத் திட்டங்கள் நன்கு பிரயோசனமாகவும் பயணளிக்க கூடியதாவும் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X