2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சூழல் பாதுகாப்புக்கான வளமாக்கல் திட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

பிரதேச செயலகம் தோறும் பாடசாலை மாணவர்களுக்கூடாக, “சூழல் பாதுகாப்புக்கான வளமாக்கல் திட்டம்” எனும் தொனிப்பொருளில், நாற்றுக்களை உற்பத்தி செய்தல் தொடர்பாக கருத்தரங்கு, பயிற்சிகளை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் நடத்தி வருகின்றது.

இதனடிப்படையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள  பாடசாலை மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கும், செய்முறை பயிற்சியும், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இதன்போது வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் வளவாளராகக் கலந்துகொண்டு நாற்றுக்களை உற்பத்தி செய்தல் தொடர்பான விளக்கக் கருத்துகளை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X