2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை அலுவலகக் கட்டடம் உட்பட 3 கட்டடங்கள் உடைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை அலுவலகக் கட்டடம் உட்பட மூன்று கட்டடங்களின் கூரைகள் உடைக்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தெற்கு பிரசேதத்திலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை அலுவலகக் கட்டடம், புதிய காத்தான்குடி தெற்கு பல நோக்கு மண்டபம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலைக் கட்டடம் என்பவற்றின் கூரைகளே,  இனந்தெரியாதோரால் நேற்றிரவு (04) உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த மூன்று கட்டடங்களும் ஒரே வளாகத்திலேயே அமைந்துள்ளன.

இக்கட்டடங்களில் ஓடுகள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டடங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை இணைப்பாளர் எம்.ஐ.சலீம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கட்டடங்கள், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தெற்கு கிரா உத்தியோகத்தர் பிரிவின் தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X