ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 21 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலகம், சுமார் 8 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி இயங்கி வருகின்றது.
புதிய பிரதேச செயலாளர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தொடர்ந்தும் பதில் பிரதேச செயலாளராக நிருவாகப் பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
எவ்வாறாயினும், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கு பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென, ஏறாவூரில் உள்ள பொது நல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளன.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல். முஹம்மது ஹனீபா, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .