2025 மே 08, வியாழக்கிழமை

சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் கௌரவிப்பு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிரன், வ.சக்தி, எம்.எஸ்.எம் நூர்தீன்

இலங்கையின் கரையோர பிரதேசங்களுடாக சைக்கிளில் சுற்றி கடல் மற்றும் கரையோர பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “ஓசோன் ரைட்” எனும் கருப்பொருளில், மட்டக்களப்பிலிருந்து 1,300 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்ட மட்டக்களப்பின்  இளைஞர்கள் இருவருக்கும் பயண நிறைவு வரவேற்பும் கௌரவிப்பும்,  கல்லடி கடற்கரையில் நேற்று முன்தினம் (11) மாலை   நடைபெற்றது.

“Ocean biome” அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமாரசிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன்  ஆகியோரின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எர்.ஆர்.குமாரசிறி  கலந்துகொணடார்.

கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் நோக்கில், “Ocean biome” அமைப்பு  இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்  பயணம் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.

இரு சைக்கிள் ஓட்டிகளும்  11 நாட்கள் கொண்ட நீண்ட சைக்கிள் சவாரியை   மேற்கொண்டார்கள்.  

இப்பயணத்தின் நோக்கமானது  கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதும் கடலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கடல் வளங்களை கையாளும் போது பொறுப்பை உருவாக்குவதுமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X