2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சைக்கிள்கள் வழங்கிவைப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பால் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இன்று (01) இடம்பெற்றது.

வாகரை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன், கோறளைப்பற்று சமூக மேம்பாட்டு அமைப்பின் செயலாளரும் சமூக சேவையாளருமான க.கமலநேசன், வம்மிவட்டவான் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.இந்திரன், கண்டலடி அருந்ததி வித்தியாலய அதிபர் எஸ்.மோகனசுந்தரம், வட்டவான் கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாகரைக் கல்விக் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற ஏழு மாணவர்களுக்கு இதன்போது  சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வாகரைப் கல்விக் கோட்டமானது கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட கோட்டமாகக் காணப்படுவதுடன், மாணவர்களின் கல்வி மட்டம் தற்போது உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X