Editorial / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடிப் பகுதியில், சொகுசுக் காரில் கேரளாக் கஞ்சாவைக் கடத்திய இருவரை, நேற்று (03) மாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களிடமிருந்து சுமார் 02 கிலோகிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசுக் காரும் மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸின் ஆலோசனைக்கமைவாக, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸ் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.டி.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், இந்தக் கடத்தலை முறியடித்துள்ளனர்.
இந்தக் கஞ்சாக் கடத்தல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago