2026 மார்ச் 07, சனிக்கிழமை

சொகுசுக் காரில் கஞ்சா கடத்தல்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு சொகுசுக் காரில் கேரளா கஞ்சா கடத்திய இருவரை, மட்டக்களப்பில் வைத்து இன்று (03) அதிகாலை கைது செய்ததுடன், அவரிகளிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜெயசிங்க தெரிவித்தார்.

பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினர், மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் வைத்து இந்தக் காரை மறித்து சோதனை செய்த போது, காரில் சூட்சகமாக மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம், பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை, நேற்று (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .