Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2019 ஜூலை 08 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மஹிந்த ராஜபக்ஷ வுடனான அணியினர் காண்கின்ற கனவாகுமென கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி , இதற்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மையினருக்குள்ளெதெனவும் தெரிவித்த அவர், நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கெதிராக தற்போதிருக்கின்ற பயங்கரவாதம் ஜனாதிபதித் தேர்தல் வரை தொடர்ந்தேர்ச்சியாக இருக்கும். நாளை முடிந்து விடும் மறுநாள் முடிந்து விடுமென்று நீங்கள் யாரும் யோசிக்காதீர்களெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எப்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற ஜனாதிபதியைப் பெற்றுக் கொள்ளலாமென்று அவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றார்களோ அல்லது கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்களோ அது வரைக்கும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதானிருக்கும் என்பதையும் நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago