Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
'அரசின் தலைவர் மைத்திரி, அரச பரிபாலனத்தின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க ஆகிய இருவரும், தங்கள் மத்தியில் சடுகுடு விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கிராம இராஜ்ஜியத்தைத் தருவோம் என்றவர்கள், இன்று பிரதேச சபைத் தேர்தல்களை நடத்துவதற்குக்கூட துணிவில்லாதவர்களாக உள்ளனர்” என்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கல்லடிக் காரியாலயத்தில், இன்று(24) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கூறிய அவர்,
“2015ஆம் ஆண்டில் இருந்து, புதிதாக நல்லாட்சியைத் தருகின்றோம் என்று சிவில் சமுகங்களின், அடிமட்ட மக்களின் துணையுடன் ஆட்சிப் பீடமேறிய தலைவர்கள், இன்று கள்வர் ஆட்சியை நடத்துகின்றனர்.
“அரசியல் பழிவாங்களுக்கு ஆளாகியவர்களுக்கு, இன்றுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. அரசாங்கத்தில் அமைச்சர்கள் இனவாத மதவாத கோட்பாடுகளைப் பின்பற்றி ஆட்சி செய்கின்றனர். இதனால் சிவில் சமுகத்தவர்களினதும் அடிமட்ட பொது மக்களினதும் எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இன்று பெரும்பான்மை இனத்தின் கட்சியில் போட்டியிடுவதற்கு எவரும் முன்வராத நிலை காணப்படுகின்றது. எனவே, குறிப்பிட்ட பெரும்பான்மைக் கட்சிகள் புதியவர்களைப் புகுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
“இவற்றின் விளைவுகளே இரண்டு வருடங்களாக தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கின்றது.
“அரசின் தலைவர் மைத்திரி அரச பரிபாலனத்தின் தலைவர் ரணில் தங்கள் மத்தியில் சடுகுடு விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிராம இராஜ்ஜியத்தைத் தருவோம் என்றவர்கள், இன்று பிரதேச சபைத் தேர்தல்களை நடத்துவதற்குக் கூட துணிவில்லாதவர்களாக அரச பரிபாலனம் செய்யும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கொண்டு ஊழல் மிகுந்த கள்வர் ஆட்சியை நடத்தி வருகின்றனர். இது இந்த நாட்டில் ஒரு கலவர சூழலை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டு வந்துள்ளது' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
19 minute ago
26 minute ago