2025 மே 08, வியாழக்கிழமை

ஜன்னலை உடைத்து நகை, பணம் கொள்ளை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள யுனியன் கொலனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் ஜன்னலை உடைத்து, அங்கிருந்த 40 பவுண் தங்க நகைகள் மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணம் என்பன, இன்று (08) அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் தாயும் மகனும் இருந்துள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் அவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.

காலையில் எழுந்திருந்தபோது, வீட்டின் ஜன்னல் கிறிலை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள், அங்கு பை ஒன்றில் வைத்திருந்த 40 தங்க நகைகள் மற்றும் 65 ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X