2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஜவ்பர்கானுக்கு தேசிய சாஹித்திய மண்டல விருது

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிரேஸ்ட ஊடகவியலாளரும் தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் 2015ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய 'முறிந்த சிறகும் என் வானமும்; எனும் கவிதை நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியவாதியாகவும் முழுநேர ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவரும் ஜவ்பர்கான் இவர் எழுதிய மௌன தேசம் கவிதை நூலுக்காக  தேசிய சாஹித்ய மண்டல விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8 நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X