Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
Janu / 2025 மே 19 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை திங்கட்கிழமை (19) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கு மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 அக்டோபர் 12 ஆம் திகதி பிறந்தார்.இவர் புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.
திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலை பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.ஜோசப் பொன்னையா 1980 ஏப்ரல் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியமர்த்தப்பட்டார்.இவர் பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப் பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.
மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராக (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
2001-2006 ஆண்டு காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொறுப்பாளராகப் பதவியேற்றார்.கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.இவர் 2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.2012 ஆம் ஆண்டு ஜூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
க.விஜயரெத்தினம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago