2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஞாயிறு வகுப்புகளை பிறிதொரு தினத்தில் நடத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஞாயிற்றுக்கிழமைகளில்; நடைபெறும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் இடம்பெறாத வகையில் ஏற்பாடு செய்யுமாறும் இத்தினத்தில் நடைபெறுகின்ற கல்வி தொடர்பான அனைத்து விடயங்களையும் வேறு தினத்தில் நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட சர்வமத பூஜை வழிபாடுகளின் பின்னர் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை (27) இடம்பெற்றது.
இதன்போது, மரியாள் பேராலயம் ஆயர் பொன்னைய்யா யோசப் மற்றும் அருட்தந்தையும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

மரியாள் பேராலய ஆயர் பொன்னைய்யா யோசப் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், வடமத்திய மாகாண முதலமைச்சர் சொய்சா ஜெயரத்தன, கிழக்கு  மாகாண சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்தை மற்றும் கிரமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் பலர் இதில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X