Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்
சித்தாண்டி பிரதேசத்தில் இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோவிலுக்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று(23) நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன், வட, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி உட்பட பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
1990ஆம் ஆண்டு, இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு, முறக்கொட்டான்சேனை பிரதேசங்களின் மக்கள் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின் காணாமல் ஆக்கப்பட்டனர்.

30 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
58 minute ago
2 hours ago